Back

பயனாளர் கவனத்திற்கு:

இந்த தளத்தில் உறுப்பினர்களாக உள்ள உதவி கேட்போரையும், உதவி செய்வோரையும் எவ்வித நேரடி ஆய்வுக்கும், சரிபார்த்தலுக்கும், உட்படுத்தாமல் நேரடியாக இணைப்பதால் உறுப்பினர்களின் உண்மைத் தன்மைக்கும், தரத்திற்கும், செயல்பாடுகளுக்கும், தவறான புரிதல்களுக்கும், உறுப்பினர்கள் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கும், எந்த வகையிலும் அறவழி நாடு சமூக சேவை மென்பொருள் தளமும், நிர்வாகமும் பொறுப்பாகாது.

உறுப்பினர்கள், பயனாளர்கள் அவரவர் சுய விருப்பத்துடன், சுய தேடலுடன், எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்குள் உதவி செய்து கொள்ள மட்டுமே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நோக்கத்திற்கு முரணாக யாரேனும் செயல்பட்டால் அவர்களைப்பற்றி நிர்வாகத்திடம் முறையிட்டால் அவர்கள் இத்தலத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆயின் தனிநபர்கள் செய்யும் எவ்வித தவறுக்கும் நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது.


உதவி வேண்டுவோர் கவனத்திற்கு:

உண்மையான தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே தாங்கள் உதவி கேட்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாகவோ அல்லது தவறான நோக்கத்தோடு உதவி கேட்பது தெரியவந்தால், தங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த சேவை தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்


உதவும் உள்ளம் கொண்டோர் கவனத்திற்கு:

தாங்கள் உதவி செய்வதற்கு முன் உதவி கேட்போரை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் தேவையை உறுதி செய்த பின்னர் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறான புரிதலுடன், எவ்வித லாப நோக்கத்துடன் உதவிகள் செய்தால் அதற்கு அறவழி நாடு நிர்வாகம் பொறுப்பாகாது


இங்கனம்,
அறவழி நாடு நிர்வாகம்
முப்பொழுதும் நற்பணி - பங்கு கொள்வோம், பகிர்ந்து கொள்வோம்